Test

Changes in Promotional and Incentive Structure of PLI / RPLI || F. No: 28-03/2019-LI (2) Dated:19.03.2025

Changes in Promotional and Incentive Structure of PLI / RPLI  ||  F. No: 28-03/2019-LI (2) Dated:19.03.2025

 


அனைவருக்கும் வணக்கம்.

தற்போது இலாகாவில் வழங்கப்பட்டு வருகின்ற PLI / RPLI இன்சென்ட்டிவ் விகிதங்களில் சற்று மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது .
இதற்கான உத்தரவு இன்று இயக்குனரகத்தால் வெளியிடப்பட்டுள்ளது.


இதன்படி ஒரு புதிய பாலிசிகளை பிடிப்பதற்கு தற்போது கோட்ட மற்றும் உப கோட்ட நிர்வாக அலுவலகத்தில் பணிபுரியும் Supervisory ஊழியர்களுக்கு வழங்கப்படும் Monitoring Incentive என்பது பிரீமியம் கிரெடிட் செய்யப்பட்ட நாளை கணக்கில் கொள்ளப்பட்டு வழங்கப்படும். அதாவது முழு ஆண்டு/ காலாண்டு அரையாண்டு /மாதாந்திர ஆகிய வகைகளில் பிரீமியம் செலுத்தும் போது பிரீமியம் செலுத்தப்பட்ட தேதியில் சம்பந்தப்பட்ட பணிகளில் உள்ள அதிகாரிகளுக்கு Incentive வழங்கப்படும். ஆண்டு பிரீமியம் தவிர பிற பீரிமியம் வகைகளில் இன்சென்டிவ் என்பது பிரீமியம் செலுத்தப்பட்ட தேதியில் பணிபுரிந்து வரும் அதிகாரிகளுக்கு வழங்கப்படும் .


பிரீமியம் செலுத்தப்பட்ட தேதியிலிருந்து பிரீலூக் அப் பீரியட் முடிவடைந்த பிறகு மட்டுமே Incentive வழங்கப்படும்.


முதல் 12 மாதங்களுக்கு செலுத்துகின்ற பிரீமியத்தை வைத்து வழங்கப்படுகின்ற Procurement Incentive என்பது கீழண்டவாறு மாற்றி அமைக்கப்பட்டுள்ளது .


a. DEVELOPMENT OFFICER - டைரக்ட் ஏஜென்ட் மற்றும் பீல்டு ஆபீஸர்களால் பிடிக்கப்படுகின்ற புதிய பிரிமியத்தில் 0.8% கமிஷனாக வழங்கப்படும்


உப கோட்ட அதிகாரிகளுக்கு (IP ASP) களுக்கு ஜிடிஎஸ் ஊழியர்களால் பெறப்பட்ட New பிசினஸ் பிரீமியத்தில் 0.6% கமிஷனாக வழங்கப்படும்



Mail overseerகளுக்கு அவர்களுக்கு கீழே உள்ள ஜி டி எஸ் ஊழியர்களால் பிடிக்கப்பட்ட New Business பிரீமியத்தில் 0.2% கமிஷனாக வழங்கப்படும் .


உப கோட்ட அதிகாரிகளுக்கு (IP ASP) களுக்கு இலாகா ஊழியர்களால் பெறப்பட்ட New பிசினஸ் பிரீமியத்தில் 0.8% கமிஷனாக வழங்கப்படும்


ASP Head Quarters ஆக பணிபுரிபவர்களுக்கு நிர்வாக பிரிவு அலுவலகங்களில்( DO/ SDO) பணிபுரியும் இலாகா ஊழியர்கள் பிடிக்கும் புதிய பிசினஸ் பிரீமியத் தில் 0.8% கமிஷன் வழங்கப்படும்



ASP Head Quarters இல்லாத அலுவலகங்களில் மண்டல அலுவலகத்தின் உடைய ஒப்புதல் பெற்று கோட்ட கண்காணிப்பாளர் நியமனம் செய்யும் IP ASPகள் RPLI PLI பணிகளை மேற்பார்வை செய்யலாம் .அவ்வாறு இந்த பணிகளை பார்க்கின்ற IP ASP கள் இந்த 0.8% இன்சென்டிவ் பெற தகுதி உடையவர்கள் ஆகிறார்கள்.


கோட்ட கண்காணிப்பாளர்கள், தங்கள் கோட்டத்தில் உள்ள அனைத்து ஏஜென்ட்கள் வசூல் செய்யும் New Business பிரீமியத்தில் 0.2% Incentive ஆக பெறுவார்கள் .


Development Officer / IP/ ASP / Mail overseer/ ASP HQ/ Superintendent ஆகியோருக்கு Renewal இன்சென்டிவ் ஏதும் வழங்கப்பட மாட்டாது


இந்த மாற்றங்கள் அனைத்தும் 1.4.2025 முதல் நடைமுறைக்கு வருகிறது


F.No. 28-3/2019-LI(2) DTD 19.3.2025


Post a Comment

0 Comments