Test

Changes in Promotional and Incentive Structure of PLI / RPLI - Directorate Lr dtd 19.03.2025

Changes in Promotional and Incentive Structure of PLI / RPLI - Directorate Lr dtd 19.03.2025

Download PDF




அனைவருக்கும் வணக்கம்

தற்போது PLI RPLI பணிகளுக்கு வழங்கப்பட்டு வருகின்ற இன்சென்டிவ் தொகையை ஏஜென்ட்கள் தொடர்ந்து பெறுவதற்கான சில விதிமுறைகள் இலாகாவால் தளர்த்தப்பட்டுள்ளன.

இது குறித்து இன்று இயக்குனரகத்தால் ஆணையானது பிறப்பிக்கப்பட்டுள்ளது.

1. இதன்படி ஏஜென்ட்கள் குறைந்தபட்சம் நான்கு பாலிசிகள் ஒரு நிதியாண்டில் பிடிக்க வேண்டும் என்ற நிபந்தனை என்பது தளர்த்தப்பட்டுள்ளது .

2.ஒரு இலாகா ஊழியர் பதவி உயர்வில் PLI பாலிசிகள் பிடிக்க முடியாதபடி பதவி உயர்வு பெறும் பட்சத்தில் அதாவது AAO வாக பதவி உயர்வு அல்லது IP/ ASP கள் கோட்ட கண்காணிப்பாளர் S P/ SSP ஆக பதவி உயர்வு பெற்று இருந்தால் பதவி உயர்வு பெறுவதற்கு முன்னர் அவர்கள் பிடித்திருந்த பாலிசிகளுக்கு Renewal Incentive என்பது இறுதி பிரீமியம் செலுத்தும் வரை வழங்கப்படும்

3.. ஒரு ஏஜென்ட் கிரிமினல்/ குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு, ஒழுங்கீனமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு, ஏமாற்று வேலைகள் , நம்பகத்தன்மை இழக்கும் நிலையில் அவருடைய நேரடி முகவர் உரிமம் என்பது ரத்து செய்யப்படும். அவருக்கு அந்த தேதியில் இருந்து இன்சென்டிவ் வழங்கப்படாது .இது பணியில் இருந்து ஒழுங்கு நடவடிக்கை காரணமாக பணிநீக்கம் செய்யப்பட்ட இலாக்கா மற்றும் ஜிடிஎஸ் ஊழியர்களுக்கும் பொருந்தும்.

4.ஒரு முகவர் முகவராக பணிபுரிந்து வந்த காலத்திலேயே இறந்து போகும் பட்சத்தில் அவருக்கு வழங்கப்பட வேண்டிய Renewal கமிஷன் தொகை என்பது தொடர்ந்து அவருடைய வாரிசுதாரருக்கு பிரீமியம் செலுத்தும் காலம் வரை வழங்கப்படும். இதற்கு நீதிமன்றத்தால் வழங்கப்படுகின்ற சக்சஸன் சர்டிபிகேட் அல்லது வாரிசு சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் . வாரிசுதாரர் கமிஷன் தடையின்றி இறுதி வரை பெறுவதற்கு சம்பந்தப்பட்ட முகவர் குறைந்த பட்சம் இரண்டு வருடங்கள் அவர் முகவராக நியமிக்கப்பட்ட நாளில் இருந்து பணிபுரிந்து இருக்க வேண்டும். குறைந்த பட்சம் எட்டு பாலிசிகளை இந்த 2 ஆண்டுகளில் பிடித்திருக்க வேண்டும். வாரிசுதாரர்கள் இறந்துவிட்ட முகவரின் Agent Code பயன்படுத்த முடியாது. ஆனால் வாரிசுதாரர்கள் தனியாக ஏஜென்ட் ஆக இணைந்து கொண்டு புதிய பாலிசிகளை பிடிக்கலாம். வாரிசுதாரர் மற்றும் அவர்களது சேமிப்பு கணக்குகள் குறித்த விவரங்கள் சாப்ட்வேரில் இணைக்கப்பட்டு தங்கு தடை இன்றி கமிஷன் பெறுவதற்கு வழிவகை செய்யப்பட வேண்டும் .

5.நேரடி முகவர் மற்றும் Field Officer ஆகுவதற்கு தற்போது உள்ள அதிகபட்ச வயது வரம்பு என்பது தளர்த்தப்படுகிறது. இனி எந்த வயதிலும் ஒருவர் நேரடி முகவர் அல்லது FO வாக இணையலாம் .

6.பணியில் இருந்து ஓய்வு பெற்ற இலாகா மற்றும் ஜிடிஎஸ் ஊழியர்கள் அவர்கள் பணியில் இருந்த போது பிடித்த பாலிசிகளுக்கான Renewal Incentive என்பது தொடர்ந்து வழங்கப்படும் .இதற்கு நிபந்தனையாக பணி ஓய்வு பெற்ற இலாகா ஊழியர் அல்லது ஜி டி எஸ் ஊழியர் அவர்கள் பணி ஓய்வு பெற்ற நாளில் இருந்து மூன்று மாதத்திற்குள் தங்களை Field Officer ஆக இணைத்துக் கொள்ள வேண்டும்

மேலே சொன்ன இந்த மாற்றங்கள் அனைத்தும் உரிய வகையில் கிடைக்க மெக்காமிஷ் சாஃப்ட்வேர் மாற்றம் செய்யப்படும்

இந்த மாற்றங்கள் அனைத்தும் 31. 3. 2025 அன்று நடைமுறைக்கு வருகிறது.

F.No. 28-3/2019-LI DTD 19.3.2025


 

 

Post a Comment

0 Comments