Test

GDS Welfare Fund -6 குறைந்த வட்டியிலான (5%) திரும்ப செலுத்தத்தக்க வகையிலான கடனுதவி (REPAYABLE LOAN):

 

Team’s Daily Bytes

GDS Welfare Fund -6

By Com A.Kesavan, Asst General Secretary

குறைந்த வட்டியிலான (5%) திரும்ப செலுத்தத்தக்க வகையிலான கடனுதவி (REPAYABLE LOAN):

1)இத்திட்டத்தின் மூலம் ஆண்டிற்கு 5% என்கின்ற குறைந்தபட்ச வட்டியில், அதிகபட்சமாக ரூ.50000/- வழங்கப்படும். இதனை 56 தவணையாகவோ/அதற்குள்ளாகவோ மாதாந்திர TRCA வில் பிடித்தம் செய்கின்ற வகையில், கடனுதவி பெற GDS ஊழியர் தகுதிபெறுவர்.

2)GDS ஊழியர்கள் அவரது மொத்த பணிக்காலத்தில், அதிகபட்சமாக ரூ.50000/- என்கிற வகையில், முன்னர் ஏதேனும் இதேபோன்று கடன்பெற்றிருப்பின், அது திரும்ப செலுத்தப்பட்டு, நிலுவை ஏதும் இல்லாத நிலையில் இருமுறை இக்கடனுதவி பெற தகுதி பெறுவர்.

3) இத்திட்டத்தின் மூலம் வழங்கப்படும் திரும்பசெலுத்துகின்ற வகையிலான கடனுதவி பின்வருமாறு.

 

எண்

கடனுதவியின் பெயர்

கடனுதவி பெற தகுதிகள்

01.

கிளை அலுவலகம் செயல்பட கழிவறை(ஃப்ளஷ்டாய்லட்) உடனான ஒரு அறை கட்டிடம்கட்டுவதற்கான கடனுதவி

· அதிகபட்ச கடன்தொகையாக ரூ.50000/- வழங்கப்படும்.

·    GDS ஊழியர் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் தொடர்ச்சியாக பணியிலிருந்திருக்க வேண்டும்.

·        அவருக்கு 8 ஆண்டு பணிக்காலம் மீதியிருத்தல் வேண்டும்.

·        இக்கடன் வசதி BPM பெயரில் உள்ள நிலத்தில் புதிய கட்டுமானத்திற்கு மட்டுமே வழங்கப்படும். புதுப்பித்தலுக்கோ/பழுதுபார்த்தலுகோ/முன்னரே கட்டிய அறையை வாங்குவதற்கோ வழங்கப்படமாட்டாது.

·    கடன் பெற்ற 6 மாதத்திற்குள்ளாக கட்டுமானத்தை முடிக்க வேண்டும்.

·        பெற்ற கடன் மற்றும் அதற்குண்டான வட்டி தொகையினை மாதம் ரூ.1000/- வீதத்தில் 56 தவணைகளில் திரும்ப செலுத்தும் விதமாக மாதாந்திர TRCA வில் பிடித்தம் செய்யப்படும்.

 

 

Source : Directorate Lr. No. (No.20-09/2019 WL& Sports dtd 11.09.24 

 

Post a Comment

0 Comments