2 inter circle and 2 intra circle transfers will be eligible for an official during entire service. However 3 years of gap shall be mandatory for availing same category of transfer for the second time.
· One additional chance in both the above categories is available for PwBD candidates.
· Female employees who has availed maximum admissible chances for transfer but want further transfer to join parental home after divorce will make request to CPMG with all relevant supporting documents. Such cases will be forwarded to DGPS, who is competent to allow additional chance of transfer. If it is allowed by DGPS CEPT will be informed to allow registration of transfer request by such employee on online portal.
Division level employees shall make a maximum of 10 Divisions in order of preference within a Postal Circle . Circle cadre officials shall make request for only one circle.
· Employee can withdraw his transfer request at anytime in the online portal. Employee has also been provided with opportunity to decline provisionally approved transfer on online portal within 72 hours of such allotment.
· After 72 hours if an employee wishes to cancel his approved transfer, he may do so and in such cases employee will deemed to have availed one chance of transfer...
Some Important Points in Rule 38 transfer after approval of transfers as per order dt 03.03.2023
· ஒரு ஊழியர் தன்னுடைய ஒட்டுமொத்த சேவைக் காலத்தில் 2 முறை வட்டத்திற்குள்ளாகவும், 2 முறை வட்டம் விட்டு வேறொரு வட்டத்திற்கும் இட மாறுதல் பெற முடியும். அதே சமயம் ஒரே வகையான இட மாறுதல் பெற 3 வருட கால இடைவெளி அவசியம்.
· மாற்றுத்திறனாளி ஊழியருக்கு மேலே சொல்லப்பட்ட இரண்டு வகைகளிலும் மேலுமொரு இட மாறுதல் வாய்ப்பு வழங்கப்படும்.
· அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச இட மாறுதல் வாய்ப்புகளை அனுபவித்த பெண் ஊழியர் ஒருவர், விவாகரத்திற்கு பின் தாய் வீடு செல்ல விரும்பி அதன் பொருட்டு இட மாறுதலுக்கு வின்ணப்பிக்க விரும்பினால் தக்க சான்றுகளுடன் CPMG அவர்களுக்கு தனது வேண்டுதலை சமர்ப்பிக்கலாம். அதன் பின்னர் அவை DGPS அவர்களின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும். DGPS அவர்களின் ஒப்பதல் கிடைத்த பின் CEPT க்கு தகவல் கொடுக்கப்பட்டு சம்பந்தப்பட்ட ஊழியர் online portal இல் தனது இட மாறுதல் விண்ணப்பத்தினை சமர்ப்பிக்கும் வண்ணம் மாற்றங்கள் செய்யப்படும்.
· கோட்ட அளவிலான பதவிகளுக்கு 10 கோட்டங்கள் வரை விருப்பங்களின் வரிசையை தெரிவிக்க இயலும் அதுவே வட்ட அளவிலான பதவிகளுக்கு ஒரே ஒரு வட்டத்தினை மட்டுமே விருப்பமாக தெரிவிக்க முடியும்.
· ஊழியர் ஒருவர் எந்நேரம் வேண்டுமானலும் தனது இட மாறுதல் விண்ணப்பத்தினை திரும்ப பெற்றுக் கொள்ளும் வகையில் online portal இல் வசதிகள் உள்ளன. இட மாறுதல் வேண்டுகோள் அனுமதிக்கப்பட்ட 72 மணி நேரம் வரை கூட திரும்பப்பெறும் வாய்ப்பு உள்ளது.
· அதற்கு பின்னர் திரும்பப் பெறப்படும் அனுமதிக்கப்பட்ட இட மாறுதல் வின்ணப்பங்கள், சம்பந்தபட்ட ஊழியர் அந்த இட மாறுதல் விண்ணப்பத்தினை அனுபவித்ததாகவே கணக்கில் கொள்ளப்படும்...
0 Comments