Test

Policy guidelines on delivery of Postal articles by Delivery staff through their own two-wheeler vehicle

 Policy guidelines on delivery of Postal articles by Delivery staff through their own two-wheeler vehicle

 

அஞ்சல் இயக்குநரகம் 25.10. 2024 தேதியிட்ட உத்தரவில் பட்டுவாடா ஊழியர்கள் இருசக்கர வாகனம் மூலம் பட்டுவாடா செய்தல் மற்றும் அதற்கான எரிபொருள் கட்டணங்களை வழங்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டிருந்தது. அந்த வழிகாட்டுதல் உத்தரவில் 15.11. 2024 முதல் அனைத்து அஞ்சலகங்களிலும் இயந்திரமயமாக்கப்பட்ட(Scooter /Bike) பட்டுவாடா முறையை செயல்படுத்த அனைத்து அஞ்சல் வட்டங்களும் கோரப்பட்டிருந்தது. 29.12.2024 அன்று நடந்த ‌ ஆய்வு கூட்டத்தில் மாண்புமிகு தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் இது குறித்து ஆய்வு செய்தார். 31.12.2024க்குள் அனைத்து டெலிவரி பீட்களும் இயந்திரமயமாக்கப்பட்ட டெலிவரியின் கீழ் (அதாவது  இருசக்கர வாகனங்கள் மூலம் பட்டுவாடா )இருக்க வேண்டும் என்று மாண்புமிகு மத்திய தொலைதொடர்பு அமைச்சர்  வலியுறுத்தியுள்ளார்.

அதன்படி 25.10.2024 ல் வெளியிடப்பட்ட கொள்கை வழிகாட்டுதல்களின் அடிப்படையில்  இயந்திரமயமாக்கப்பட்ட பட்டுவாடா வின் கீழ் அனைத்து  பீட்களையும் கொண்டு வர தேவையான நடவடிக்கைகளை எடுக்க அஞ்சல் வட்டங்களுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments