Team’s Daily Bytes
By Com A.Kesavan, Asst General Secretary
GDS தோழர்களுக்கான இடம் மாறுதல் உத்தரவு குறித்த சமீபத்திய விளக்க ஆணை கூறுவது என்ன?? --- 2
Dte. Lr. No. 17-31/2016- GDS Pt.i dtd 10.10.2024
1. இடமாறுதல் உத்தரவு வேண்டி விண்ணப்பிக்க GDS ஊழியர்கள் அவர்களுடைய தொலைபேசி எண்ணை இடமாறுதல் போர்ட்டலில் இணைக்க வேண்டும்.
2. தொலைபேசி எண்ணை இணைக்கும் பணியானது கோட்ட அதிகாரிகளால் மட்டுமே செய்ய முடியும்
3. இதற்கான இணையதள முகவரி https://rule3.cept.gov.in/
4. ஊழியர் உடைய Employee ஐடி என்பது இணையதளத்தில் Login ID ஆக இருக்கும்.
5. இணைய தளத்தில் இணைந்த பின் OTP இணைக்கப்பட்டுள்ள மொபைல் எண்ணிற்கு வரும்.
6. ஜி டி எஸ் ஊழியர் ஒரே ஒரு கோட்டத்தில் எத்தனை பதவிகளுக்கும் விண்ணப்பிக்கலாம்.
7 . ஒரு பதவிக்கு அவருடைய விண்ணப்பம் பரிசீலிக்கப்பட்டால் மற்ற பதவிகளுக்கு அவர் அளித்துள்ள விண்ணப்பத்தின் உரிமை என்பது தானாக ரத்து செய்யப்படும்.
8. ஜி டி எஸ் ஊழியர் ஆன்லைனில் விண்ணப்பித்த பிறகு விண்ணப்பத்தில் ஏதேனும் மாற்றங்கள் செய்ய முயற்சித்தால் கடைசி நாளுக்குள் செய்து முடிக்க வேண்டும்.
9. கணவன் அல்லது மனைவி பணி இடத்திற்கு மாறுதல் விண்ணப்பிக்கும் பொழுது அவர்கள் பணிபுரியும் இடத்தில் இருந்து உரிய சான்றிதழை பெற்று அதனை ஆன்லைனில் அப்லோடு செய்ய வேண்டும்.
10. ஆன் லைனில் பதிவு செய்த பிறகு அவருக்கு எஸ் எம் எஸ் மற்றும் இமெயில் மூலமாக செய்தி தெரிவிக்கப்படும்.
11.GDS ஊழியர் உடைய விண்ணப்பம் பரிசீலிக்கப்பட்டு இடமாறுதல் உத்தரவு அளிக்கப்பட்டால் அது குறித்த விவரங்கள் ஆன்லைன் போர்ட்டலில் வெளியிடப்படும்.
12. ஊழியரின் விருப்பம் நிறைவேற்றப்பட்டதற்கான செய்தியும் SMS மற்றும் ஈமெயில் மூலம் அளிக்கப்படும் .
13. ஏதேனும் காரணத்திற்காக ஜி டி எஸ் ஊழியரின் விண்ணப்பம் பரிசீலிக்கப்படவில்லை எனில் அவர் மீண்டும் புதிதாக விண்ணப்பிக்க வேண்டும்.
0 Comments