Test

GDS தோழர்களுக்கான இடம் மாறுதல் உத்தரவு குறித்த சமீபத்திய விளக்க ஆணை கூறுவது என்ன?? --- 1

 

Team’s Daily Bytes 
By Com A.Kesavan, Asst General Secretary

GDS தோழர்களுக்கான இடம் மாறு
தல் உத்தரவு குறித்த சமீபத்திய  விளக்க ஆணை கூறுவது என்ன??   --- 1
Dte. Lr. No. 17-31/2016- GDS   Pt.i dtd 10.10.2024 

1. இடம் மாறுதல் பெறுவதற்கு ஜி டி எஸ் ஊழியர்கள் குறைந்தபட்சம் இரண்டு வருடங்கள் பணி முடித்து இருக்க வேண்டும்.

2. இந்த இரண்டு வருடம் என்கின்ற இந்த உத்தரவானது 1 .7 .2024க்கு முன்னர் பணியில் அமர்ந்த ஜி டி எஸ் ஊழியர்களுக்கு தளர்த்தி 31.12.25 வரை அவர்கள் ஒரு வருடம் பணி முடித்து இருந்தாலே இடமாறுதலுக்கு விண்ணப்பிக்கலாம்.

3. 31 .12.2 5க்கு பிறகு அனைத்து GDS ஊழியருக்கும் இரண்டு வருடம் தகுதி காலம் என்பது கட்டாயமாக்கப்படுகிறது.

4. ஜி டி எஸ் ஊழியர்கள் இடம் மாறுதல் பெறும் கோட்டத்தில் உள்ள மற்றொரு GDS ஊழியரோடு மியூச்சுவல் ட்ரான்ஸ்ஃபர் பெறும் வசதியில் குறைந்தபட்சம் ஒரு வருடம் பணி முடித்து இருந்தாலே போதுமானது.

 5.இடமாறுதலை ஒரு ஊழியர் அவருடைய பணிக்காலத்தில் அதிகபட்சம் இரண்டு முறை உபயோகப்படுத்தலாம். இந்த வாய்ப்பு என்பது மகளிர் ஜிடிஎஸ் ஊழியருக்கு மூன்றாக உயர்த்தி வழங்கப்படுகிறது.

6. ஒரு பணியிட மாறுதலுக்கும் அடுத்த பணியிட மாறுதலுக்கும் இடையே குறைந்தபட்சம் ஒரு வருட கால அவகாசம் என்பது கட்டாயமாக உள்ளது.

7.ஜி டி எஸ் ஊழியர் தாங்கள் ஏற்கனவே பெறுகின்ற சம்பள விகிதம் அதாவது டி ஆர் சி ஏ அடிப்படையிலேயே இடமாறுதலுக்கு விண்ணப்பிக்க முடியும்.

8.  இதுவரை மூன்று மாதங்களுக்கு ஒரு முறை என்று இருந்த இடமாறுதல் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் என்பது ஆறு மாதங்களுக்கு ஒரு முறை என மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

9. ஒரு ஜி டி எஸ் ஊழியர் ஒரே  ஒரு  கோட்டத்தில் உள்ள எத்தனை பணியிடங்களுக்கும் இடமாறுதல் கேட்டு விண்ணப்பிக்கலாம். 

10.  இடமாறுதல் கேட்டு விண்ணப்பிக்கும் ஜிடிஎஸ் ஊழியரின் கல்வி, சாதி, மற்றும் காவல் துறையினுடைய சரிபார்ப்பு விவரங்கள் அனைத்தும் முழுமையாக முடிக்கப்பட்டு இருக்க வேண்டும்.

11.  பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள ஜி டி எஸ் ஊழியருக்கு இடமாறுதல் வழங்கப்பட மாட்டாது.

12.  மேலும் ஒழுங்கு நடவடிக்கை மற்றும் காவல்துறை அல்லது நீதிமன்றத்தில் ஏதேனும் வழக்கு நிலுவையில் இருப்பினும் இடமாறுதல் வழங்கப்பட மாட்டாது .
13. நிர்வாக காரணங்களுக்காக ஒரு ஜிடிஎஸ் ஊழியர் பணியிட மாற்றம் செய்யப்பட்டு இருந்தால் மேற்கூறிய காரணங்கள் ஏதேனும் ஒன்று நிலுவையில் இருப்பின் அவருடைய இடமாறுதல் பரிந்துரைக்கப்பட மாட்டாது.

14.  பணியிட மாறுதலுக்கு விண்ணப்பித்த விண்ணப்பத்தினை இடமாறுதல் உத்தரவு வெளிவருவதற்கு முன் ஒரு GDS  ஊழியர் திரும்ப பெற முடியும். எனினும் பணியிட மாறுதல் உத்தரவு வெளிவந்து விட்டால் அவருக்கு வழங்கபட வேண்டிய வாய்ப்பில் ஒன்றை வழங்கியதாக கருதப்படும் .

15. இடம் மாறுதலில் சென்றாலும் ஏற்கனவே அவர் பணிபுரிந்த காலங்கள் அனைத்தும் இலாக்கா போட்டி தேர்வுகளுக்கு எடுத்துக் கொள்ளப்படும்.

16.  மாறுதல் பணியில் இணைந்து விட்ட பின் மீண்டும் பழைய கோட்டத்தில் பணியிடத்திற்கு செல்வதற்கு அனுமதி கிடையாது.

17.  ஒரு GDS ஊழியர் பணியிட மாறுதல் பெற்று வேறு கோட்டத்தில் இணைந்த பிறகு அவர் அந்த கோட்டத்தில் ஜூனியராக கருதப்படுவார்.

18. ஒன்றுக்கு மேற்பட்ட ஜி டி எஸ் ஊழியர்கள் ஒரே உபகோட்டத்திலோ அல்லது கோட்டத்திலோ பணியிடம் மாறுதலில் இணையும்போது அவர்களுடைய சீனியாரிட்டி என்பது அந்தந்த ஊழியரின் இலாகாவில் இணைந்த தேதியை வைத்து நிர்ணயிக்கப்படும்.

19. இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட GDS ஊழியர் ஒரே பதவிக்கு விண்ணப்பிக்கும் போது அவர்களுடைய சீனியாரிட்டி என்பது கீழ்க்கண்டவாறு நிர்ணயிக்கப்படுகிறது. 

20. A. மாற்றுத்திறனாளியாக உள்ள ஜிடிஎஸ் ஊழியர்.
B.  பெண் ஜி டி எஸ் ஊழியர் கணவர்  பணியிடத்திற்கு மாறுதல் விண்ணப்பித்தல் முறையான ஆவணங்கள் தேவை .
C.ஆண் GDS ஊழியர் மனைவியின் பணியிடத்திற்கு விண்ணப்பித்தால்.
D.  எந்த தேதியில் பணிக்கு வந்தாரோ அந்த தேதி .
E. பெண் GDS ஊழியர் .
F. ஊழியர் பிறந்த தேதி அடிப்படையில் 
G. இறுதியாக விண்ணப்பிக்கும் தேதி மற்றும் நேரம் ஆகியவை.
மிக முக்கியமாக  துணைவருடைய  பணியிடத்திற்கு  விண்ணப்பிக்கும் பொழுது அது குறித்த முறையான ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். இந்த வசதியானது மத்திய மாநில பொதுத்துறையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் .

21. ஜி டி எஸ் ஊழியர்கள் இடமாறுதல் ஆன்லைன்  மூலமாக மட்டுமே செய்ய முடியும் .

22. இந்த இடமாறுதல் அனைத்தும் புதிதாக ஜிடிஎஸ் ஊழியர்கள் பணி அமர்த்தும்  முன் செய்து முடிக்கப்பட வேண்டும் .

23. GDS ஊழியருக்கு இடமாறுதல் உத்தரவு வழங்கிய பின்னர் இது குறித்த விவரங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். இதன் உதவியோடு சம்பந்தப்பட்ட கோட்ட அலுவலகங்களில் இருந்து முறையான இடமாறுதல் உத்தரவு வெளியிடப்படும்.

To be continued tomorrow

Post a Comment

1 Comments

  1. சார் point No.14 இன் படி ரூல்3 பணியிட மாற்றம் உத்தரவு வெளிவந்த பின்னர் Decline செய்தால் ஒரு டிரான்ஸ்பர் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும், அடுத்த ட்ரான்ஸ்ஃபர் கு அப்ளை செய்வதற்கு cooling period ஓராண்டு காலம் என்பது Decline செய்தாலும் பொருந்துமா பொருந்தாதா என்று தெளிவுபடுத்துங்கள்

    ReplyDelete