Policy guidelines on delivery of Postal articles by Delivery staff through their own two-wheeler vehicle - Dte Order dtd 25.10.2024
சொந்த இருசக்கர வாகனங்களை பயன்படுத்தி பட்டுவாடா செய்யும் ஊழியர்களுக்கு எரிபொருள் கட்டணங்களை வழங்குவதற்கான அஞ்சல் துறை உத்தரவின் சாராம்சம்.
கடந்த சில ஆண்டுகளாக தபால் பட்டுவாடா பல்வேறு மாற்றங்களுக்கு உட்பட்டுள்ளது. அதிகமான தபால்காரர்கள்/GDS ஊழியர்கள் தற்போது தங்களின் சொந்த இரு சக்கர வாகனங்களை அதாவது பைக்/ஸ்கூட்டரை தபால் பட்டுவாடாசெய்ய பயன்படுத்துகின்றனர். பார்சல் இயக்குனரகம் NDCகளில் பணிபுரியும் பட்டுவாடாஊழியர்களுக்கு எரிபொருள் கட்டணங்களைச் வழங்குவதற்கான வழிகாட்டுதல்களை 06.05.2022ல் வெளியிட்டுள்ளது. NDC ல் பணிபுரியும் ஊழியர்கள் பார்சல் டெலிவரிக்காக அவர்களின் தனிப்பட்ட இரு சக்கர வாகனங்களைப் பயன்படுத்துகிறார்கள். தவிர, நாட்டில் இயங்கும் தனியார் கூரியர் நிறுவனங்கள் தத்தம் பட்டுவாடாஊழியர்களுக்குச் சொந்தமான இரு சக்கர வாகனம் மூலம் பட்டுவாடாசெய்கின்றனர்.அஞ்சல்துறை சமீபத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தர அமைச்சகத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. பிரதம மந்திரி விஸ்வகர்மா திட்டத்தின் கீழ் 15 கிலோ முதல் 40 கிலோ வரையிலான கருவிகளை கைவினைஞர்களுக்கு வழங்கப்பட வேண்டும். கருவித்தொகுப்புகள் பான்-இந்தியாவில் மூலம் பட்டுவாட செய்யப்படுகின்றன, மேலும் நோடல் பட்டுவாடாமையங்கள் தவிர மற்ற Delivery Postofficeகள் மற்றும் கிளை அஞ்சல் அலுவலகங்களின் பட்டுவாடா அதிகார வரம்பிற்கு உட்பட்ட பட்டுவாடா பகுதிகள் ஆகியவையும் அடங்கும். சிறிய நகரங்கள் மற்றும் கிளை தபால் நிலையங்களில் உள்ள பட்டுவாடா POக்கள் பயனாளிகளுக்கு வழங்குவதற்காக ஒரிரு வாரத்தில் 1-2 டூல்கிட்களைப் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இந்தப் பொருட்களை நான்கு சக்கர வாகனங்கள் மூலமும் வழங்க முடியாது அதே நேரத்தில் சைக்கிள் மூலமும் வழங்க முடியாது. எனவே தனியார் கூரியர் நிறுவனங்களில் நடைமுறையில் உள்ளதைப் போல, இதுபோன்ற வகைப் பொருட்களை பட்டுவாடாசெய்வது இரு சக்கர வாகனங்கள் மூலம் மட்டுமே எளிதாக பட்டுவாடா செய்ய முடியும்.
. Postman Recuritment விதிகளில் இரு சக்கர வாகன ஓட்டுநர் உரிமம் தபால்காரர்களுக்கான தகுதியில் இடம் பெற்றுள்ளது. பைக்/ஸ்கூட்டர் மூலம் பட்டுவாடாசெய்வது தபால்களை துரிதமாக ட்டுவாடா செய்வது மட்டுமஅல்ல கூரியர்களின் தற்போதைய போட்டிகளால் இது அவசியமாக உள்ளது. இருசக்கர வாகன மூலம் பட்டுவாடா செய்வதால் அதிக எண்ணிக்கையில் தபால்களை பட்டுவாடா செய்து பட்டுவாடா ஊழியர்களின் உற்பத்தித்திறனை மேம்படுத்துகிறது.மேலும் சைக்கிள் மிதிப்பதன் மூலம் ஏற்படும் உடல்சோர்வும் குறைகிறது.
பட்டுவாடாஊழியர்கள் தங்கள் சொந்த இருசக்கர வாகனம் அதாவது பைக்குகள்/ஸ்கூட்டர் மூலம் அனைத்து வகையான தபால்களையும் பட்டுவாடா செய்வதற்கான கொள்கை வழிகாட்டுதல்கள் மற்றும் பட்டுவாடா ஊழியர்களுக்கு எரிபொருள் கட்டணங்கள் பார்சல் இயக்குநரகத்தால் வழங்கப்பட்ட வழிகாட்டுதல்களின்படி தற்போது வடிவமைக்கப்பட்டுள்ளன. தவிர, பட்டுவாடாஊழியர்களுக்கு எரிபொருள் கட்டணங்களைக் கணக்கிடுவதற்கான கணக்கீடு பார்சல் இயக்குநரகத்தால் வழங்கப்பட்டதைப் போலவே வைக்கப்பட்டுள்ளது.
பட்டுவாடாஊழியர்கள் தங்களின் சொந்த பைக்குகள்/ஸ்கூட்டரைப் பயன்படுத்தி அனைத்து வகையான தபால்களையும் பட்டுவாடாசெய்வதற்கான வழிகாட்டுதலின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:
(அ) NDCகள் உட்பட அஞ்சல் அலுவலகங்களில் ஈடுபட்டுள்ள பின்வரும் வகையான பட்டுவாடா ஊழியர்கள் வழிகாட்டுதல்களின் கீழ் வருவார்கள்.
1.தபால்காரர் ஊழியர்கள்
2. பிற (துறை ஊழியர்கள் பட்டுவாடாப் பணியில் ஈடுபட்டுள்ளவர்கள்)
3. அவுட்சோர்ஸ் பட்டுவாடாஊழியர்கள்
(ஆ) இரு சக்கர வாகனங்கள் மூலம் பட்டுவாடாசெய்யப்படும் போது, தற்காலிக திருத்தப்பட்ட தபால்காரர் விதிமுறைகள் பட்டுவாடா ஊழியர்களுக்குப் பொருந்தும்.
மேற்கண்ட பட்டுவாடாசெய்வதற்கான பட்டுவாடா விதிமுறைகள் தபால் இயக்குநரகத்தால் வழங்கப்படும் வரை பொருந்தும்.
பட்டுவாடாஊழியர்களுக்கு எரிபொருள் கட்டணங்கள் மாதாந்திர அடிப்படையில் வழங்கப்படும். இது நடைமுறைப்படுத்தப்பட்ட நாளிலிருந்து இரண்டு ஆண்டுகளுக்குப் பொருந்தும், அதன் பிறகு, செலவு-பயன் பகுப்பாய்வின் அடிப்படையில் மேலும் தொடர்வதற்கு கொள்கை அஞ்சல் துறையால் மதிப்பாய்வு செய்யப்படும்.
. நவம்பர் 15, 2024 முதல் பட்டுவாடாஊழியர்களால் அனைத்து வகையான தபால்களையும் பட்டுவாடாசெய்வதற்கான கொள்கை வழிகாட்டுதல்களை அஞ்சல் அலுவலகங்களில் செயல்படுத்துமாறு வட்டங்கள் கோரப்பட்டுள்ளன.
எரிபொருள் கட்டணங்களை அனுமதிக்கும் முறைகள்:
1 சரிபார்க்க வேண்டிய ஆவணங்கள்:-
பின்வரும் ஆவணங்களை APM (டெலிவரி)/போஸ்ட்மாஸ்டர் அல்லது பட்டுவாடாவேலையை மேற்பார்வையிடும் வேறு எந்த அதிகாரியும் சரிபார்த்து, பட்டுவாடாஊழியர்களுக்கு வாகன மைலேஜ் கட்டணத்தை செலுத்த அனுமதிக்கும் முன், பட்டுவாடாதபால் அலுவலகத்தில் பராமரிக்கப்பட வேண்டிய கோப்பில் வைக்கப்பட வேண்டும்:
i பட்டுவாடாசெய்யும் நபரின் பெயரில் இரு சக்கர வாகன ஓட்டுநர் உரிமம்.
ii இரு சக்கர வாகனத்தின் பதிவுச் சான்றிதழின் நகல்,
iii இரு சக்கர வாகனத்தின் காப்பீட்டு சான்றிதழின் நகல்,
iv வாகனம் பட்டுவாடாஊழியர்களுக்கு சொந்தமானதாக இருக்க வேண்டும் அல்லது பட்டுவாடாஊழியர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு சொந்தமானதாக இருக்க வேண்டும். வாகனம் உடனடி குடும்பத்திற்கு சொந்தமானதாக இருந்தால் பட்டுவாடா ஊழியர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு சொந்தமானதாக இருந்தால் இதற்கான அறிவிப்பைப் பெற்று, பட்டுவாடாதபால் அலுவலகத்தில் பாதுகாப்புக் கோப்பில் வைக்க வேண்டும்.
வாகனம் பட்டுவாடாஊழியர் அல்லது உடனடி குடும்ப உறுப்பினருக்குச் சொந்தமானதாக இல்லாவிட்டால், பட்டுவாடாஊழியர்களின் பெயரில் வாகன உரிமையாளரிடமிருந்து அங்கீகாரக் கடிதம் பெறப்பட்டு பதிவில் வைக்க வேண்டும்.
கிளை அஞ்சல் அலுவலகங்களில் தபால் பட்டுவாடாவில் ஈடுபட்டுள்ள GDS ஊழியர்களுக்கு தற்போதைக்கு இந்த வழிகாட்டுதல்கள் பொருந்தாது
பெட்ரோல் இருசக்கர வாகனங்கள் போலவே மின்சார இருசக்கர வாகனம் அதாவது eBike/eScooter ஆகியவற்றுக்கும் இந்தக் கொள்கை பொருந்தும். பெட்ரோல் இருசக்கர வாகனங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட எரிபொருள் கட்டணங்கள் eBike/eScooter க்கும் பொருந்தும். தவிர, பொருத்தமான நிதி ஊக்கத் திட்டத்தின் மூலம் பட்டுவாடாஊழியர்களால் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு eBike/eScooter வாங்குவதைத் துறை ஊக்குவிக்கும். eBike/eScooter வாங்குவதற்கான நிதி ஊக்குவிப்புத் திட்டத்தின் விவரங்கள் தனித்தனியாக வெளியிடப்படும்.
பட்டுவாடா ஊழியர்களின் Delivery Performace 95% அல்லது 95% க்கும் அதிகமாக இருந்தால் 100% எரிபொருள் கட்டணமும் , 90% முதல் 94.9% வரை இருந்தால் 80% எரிபொருள் கட்டணமும் வழங்கப்படும். மேலும் இந்தக் கட்டணங்கள் PMA செயலியின் பயன்பாட்டுடனும் இணைக்கப்பட்டுள்ளது. DPMS ல் போடப்பட்டு பட்டுவாடா செய்ய கொடுக்கப்படும் Regd Post, Speed Post, Parcel உள்ளிட்ட Accountable தபால்களில் குறைந்தபட்சம் 95% தபால்களை PMA செயலியின் மூலமும் கையாண்டிருந்தால் மட்டுமே எரிபொருள் கட்டணம் வழங்கப்படும்.
வாரத்தின் ஆறு வேலை நாட்களில் பட்டுவாடாஊழியர்கள் பயணித்த தூரத்தின் சராசரியை ஒரு நாள் பயணிக்கும் தூரமாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். இரு சக்கர வாகனம் மூலம் தினசரி பயணிக்கும் தூரம் APM (டெலிவரி)/போஸ்ட்மாஸ்டர் அல்லது பட்டுவாடாவேலையை மேற்பார்வையிடும் பிற அதிகாரிகளால் சரிபார்க்கப்படும். தவிர, பட்டுவாடாஊழியர்கள் டெலிவரிக்குப் புறப்படுவதற்கு முன், டெலிவரிக்குப் பிறகு ஆகியவற்றின் இரு சக்கர வாகனத்தின் அளவீடு (Meter)குறித்துக் கொள்ளப்படும்.
பட்டுவாடா ஊழியர்கள் ஒரு நாளில் பயணிக்கும் சராசரி தூரத்தை கணக்கிட 6 வேலை நாட்களைக் கொண்ட எந்த முழு வாரத்தையும் தேர்ந்தெடுக்கலாம். ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதத்தில் ஆறு வேலை நாட்களைக் கொண்ட வாரத்தில் இதை கணக்கீடு செய்யலாம்
பட்டுவாடாஊழியர்கள் எரிபொருள் கட்டணத்தை பெறுவதற்கு விண்ணப்பிக்கும் முறை:-
முந்தைய மாதத்திற்கான எரிபொருள் கட்டணங்களை பெற அடுத்த மாதத்தின் முதல் வேலை நாளில் அதற்கான பரிந்துரைக்கப்பட்ட வடிவில் உள்ள படிவத்தை பட்டுவாடாஊழியர்கள் சமர்ப்பிக்க வேண்டும். ஒவ்வொரு தேதியிலும் பட்டுவாடா செய்த தபால்களின் எண்ணிக்கை, Delivery Performance, PMA இல் கையாளப்பட்ட தபால்களின் % மற்றும் எரிபொருள் கட்டணங்கள் கோரப்படும் மாதத்தின் ஒரு நாளின் சராசரி தூரம் ஆகியவற்றை படிவத்தில் குறிப்பிட வேண்டும்.
APM (Delivery)/SPM/PM , தபால்கள் கொடுக்கப்பட்ட விலாசதாரரின் விலாசத்தில் பட்டுவாடா செய்யப்படுவதன் உண்மைத்தன்மையைத் CEPT ன் MIS ல் PM Best Delivery Report மூலம் சரிபார்ப்பார்கள். பட்டுவாடா ஊழியர்களால் கொடுக்கப்படும் படிவத்தில் பட்டுவாடாஊழியர்கள் கொடுத்த விவரங்களை சரிபார்த்த பிறகு, APM (Delivery)/SPM/PM ஒவ்வொரு மாதமும் 5 ஆம் தேதிக்குள் அதை சம்பந்தப்பட்ட கோட்ட அலுவலகத்திற்கு அனுப்பி வைப்பார்கள். Division Heads எரிபொருள் கட்டணங்களுக்கான Billகளை ஆய்வு செய்து ஒவ்வொரு மாதமும் பத்தாம் தேதிக்குள் Sanction வழங்குவார்கள். அதன் பிறகு 15ஆம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட தலைமை அஞ்சலகங்கள் 15-ஆம் தேதிக்குள் Sanction செய்யப்பட்ட எரிபொருள் கட்டணங்களை ஊழியர்களுக்கு வழங்குவார்கள்.
0 Comments