GDS ஊழியர்களுக்கான LTF எனப்படும் Limited Transfer Facility
GDS Limited Transfer Facility (LTF) on request of Gramin Dak Sevaks (GDS) – Guidelines.
Download PDFGDS ஊழியர்களுக்கான LTF எனப்படும் Limited Transfer Facility அறிமுகப்படுத்திய பிறகு கொண்டு வரப்பட்ட மாற்றங்களின் அனுபவத்தின் அடிப்படையில், அதன் செயல்முறையை மேம்படுத்துவதற்காக அனைத்து Circle களிடமும் கருத்து/பரிந்துரைகளை அஞ்சல் துறை கோரியது.Circle களிடமிருந்து வந்த கருத்து/பரிந்துரைகளை ஆய்வு செய்ததில், Limited Transfer Facility ல் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் மற்றும் SOP தொடர்பாக இந்த விஷயத்தில் ஏற்கனவே வழங்கப்பட்ட அனைத்து முந்தைய உத்தரவுகள்/வழிகாட்டுதல்கள்/வழிமுறைகளை /வழிகாட்டுதல்களை மறுபரிசீலனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
GDS limited transfer விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்
(i) LTF இன் கீழ் Transfer க்கு குறைந்தபட்ச 'ஒரு வருடம்' என்பதிலிருந்து 'இரண்டு வருட Continuous Service' என திருத்தப்பட உள்ளது. ஒரு குறிப்பிட்ட Cycle ல் Online விண்ணப்பத்தைச் சமர்ப்பிப்பதற்கு நிர்ணயிக்கப்பட்ட கடைசித் தேதியில் ஒரு GDS Regular Engagement தேதியிலிருந்து குறைந்தபட்சம் இரண்டு வருடங்கள் Continuous Service முடித்திருக்க வேண்டும்.
(ii) எவ்வாறாயினும், 01.07.2024 க்கு முன்னர் Engagement செய்யப்பட்ட GDS களுக்கு இரண்டு வருட Continuous Service என்ற நிபந்தனை 31.12.2025 வரை தளர்த்தப்பட்டுள்ளது. ஒரு வருட Continuous Service இருந்தால் அவர்கள் GDS Limited Transfer Facility க்கு பரிசீலிக்கப்படலாம். 31.12.2025 க்குப் பிறகு, அனைத்து GDS களும் குறிப்பிட்டுள்ளபடி இரண்டு (2) ஆண்டுகள் Continuous Service என்ற நிபந்தனையை பூர்த்தி செய்திருக்க வேண்டும்.
(iii) Mutual Transfer க்கான நிபந்தனை ஒரு வருட Continuous Engagement காலமாக இருக்கும். GDS Online Transfer Cycle ன் கால அட்டவணை அவ்வப்போது வழங்கப்படும் போது, Mutual Transfer Online Request ஐ சமர்ப்பிக்க வேண்டும்.
(iv) ஆண் GDS ஊழியர்களுக்கு Entire Service ல் LTFஐப் பெற இரண்டு வாய்ப்புகள் வழங்கப்படும். பெண் GDS ஊழியர்களுக்கு மூன்று வாய்ப்புகள் கிடைக்கும். இருப்பினும், இரண்டு Transfer களுக்கு இடையே ஒரு வருட Cooling off Period இருக்க வேண்டும்.
GDS ஊழியர்களுக்கான Online Transfer Windows அவ்வப்போது திறக்கப்படும் போது, Transfer Application ஐ சமர்ப்பிக்க வேண்டும். பொதுவாக, GDS Online Transfer ஆறுமாதங்களுக்கு ஒரு முறை வழங்கப்படும். GDS Online Engagement Cycle களுக்கு முன்பாக GDS online Limited Transfer Facility வழங்கப்படுவதால் GDS ஊழியர்கள் அதிகபட்ச எண்ணிக்கையில் Transfer வசதியைப் பெற முடியும்.
(vii) GDS ஊழியர்கள் ஏதாவது GDS காலியிடம் அல்லது அனைத்து காலியிடங்களுக்கும், தங்களின் தகுதியின்படி, விருப்பத்தின்படி, ஒரு நேரத்தில் ஏதேனும் ஒரு கோட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
(viii) ஜாதி, கல்வி, Police Verification அறிக்கை போன்ற அனைத்து சரிபார்ப்பு சம்பிரதாயங்களும் முடிந்த பிறகு, Transfer விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படும். Online Transfer விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் கடைசி நாளுக்குள் மேற்கண்ட அனைத்து Verification சம்பிரதாயங்களும் முடிந்திருக்க வேண்டும். அப்படி இல்லாமல் ஜாதி, கல்வி, Police Verification அறிக்கை போன்றவற்றில் ஏதேனும் நிலுவையில் இருந்தாலும் Transfer விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.
21.10.2019 தேதியிட்ட OM எண். 17-31/2016-GDS இன் படி, நிர்வாக காரணங்களால் ஒரு GDS ஊழியர் Transfer செய்யப்பட்டிருந்தால், பின்வரும் காரணங்கள் இல்லாமல் இருப்பின் அந்த GDS ஊழியரின் Transfer பரிசீலிக்கப்படும்.
a) விஜிலென்ஸ் காரணங்களால் விசாரணை நிலுவையில் இருந்தால்
b) ஒழுங்கு நடவடிக்கைகள்/குற்றவியல் நடவடிக்கைகள் நிலுவையில் இருந்தால்
c) விஜிலென்ஸ் சம்பந்தப்பட்ட குற்றச்சாட்டுகளின் மீது தொடங்கப்பட்ட நடவடிக்கைகளில் ஒரு பெரிய அபராதம் (Dismissal/Removal/Compulsory Discharge தவிர).
ஆன்லைன் விண்ணப்பத்தைச் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியன்று ஏதேனும் ஒழுங்கு நடவடிக்கை, காவல்துறை வழக்கு அல்லது நீதிமன்ற வழக்கு நிலுவையில் இருப்பின் அத்தகைய GDS ஊழியர்கள்-ன் Transfer விண்ணப்பம் பரிந்துரைக்கப்படாது.
Transfer Approved செய்யப்பட்ட பிறகு ஏற்க மறுப்பது ஒரு Transfer Chance ஐ பயன்படுத்தியதாக கருதப்படும். GDS ஊழியர்கள் தனது விண்ணப்பத்தை ஆன்லைனில் சமர்ப்பித்த பிறகு விண்ணப்பிக்கும் காலத்திற்குள் அதாவது Windows Period ல் விண்ணப்பத்தை திரும்பப் பெறலாம். Transfer Approved செய்யப்பட்டு Relieve செய்யப்படுவதற்கு முன் எழுத்துப்பூர்வமாக Transfer ஐ ரத்து செய்யுமாறு GDS ஊழியர் கோரினால், அந்தக் கோரிக்கையை சம்பந்தப்பட்ட அதிகாரி பரிசீலிக்கலாம். எவ்வாறாயினும் ஒரு Transfer Chance ஐ பயன்படுத்தியதாக கருதப்படும்.
Transfer பெற்ற GDS ஊழியரின் முந்தைய பணிகால சேவை Postman/Mailguard and MTS தேர்விற்கு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.
(xiii) Transfer பெற்ற ஜிடிஎஸ் GRADATION பட்டியலில் தற்போதுள்ள அனைத்து GDS ஊழியர்களிலும் ஜூனியராக தரப்படுத்தப்படு வார். ஆனால் Same Subdivision /Division /Unit களிலேயே Transfer கிடைக்கப்பெற்றால் அவரது Rank இது Gradation Listல் எந்த மாற்றமும் இருக்காது. Same Subdivision /Division /Unit களை தவிர்த்து Transfer கிடைக்க பெற்று
இதர Division /Unit களில் சேரும் GDS ஊழியர்கள் Junior ஆக சேருவதால் சீனியாரிட்டி அடிப்படையில் MTS பணிநியமனத்திற்கு இவரின் Seniorகள் உரிய தகுதி பெறும் வரை இவர் Consider செய்யப்பட மாட்டார்.
இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட ஜி.டி.எஸ்.கள் இடையேயான சீனியாரிட்டி, ஒரே Sub Division/Division க்கு Transfer பெறும்போது அவர்கள் இலாகாவில் சேர்ந்த தேதியின் அடிப்படையில் முடிவு செய்யப்படும்,
முன்னுரிமை வரிசை:
ஒரு GDS காலியிடத்திற்கு இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட Transfer விண்ணப்பங்கள் பெறப்பட்டால் கீழ்க்கண்ட அடிப்படையில் முன்னுரிமை வழங்கப்படும்.
(i) PwD ஊழியர்கள்
(ii) பெண் GDS - அந்த பெண் ஊழியரின் கணவர் Central/State Government or their undertaking/PSU/Subordinate organizations etc போன்றவற்றில் பணிபுரிவராக இருக்க வேண்டும் (இதற்கான சான்றிதழைச் சமர்ப்பிக்க வேண்டும்)
(iii) ஆண் GDS- அந்த ஊழியரின் மனைவி Central/State Government or their undertaking/PSU/Subordinate organizations etc போன்றவற்றில் Non transferable அடிப்படையில் பணிபுரிவராக இருக்க வேண்டும் (இதற்கான சான்றிதழைச் சமர்ப்பிக்க வேண்டும்
(iv) Date of engagement.
(v) பெண் GDS ஊழியர்கள் (other than spouse ground)
(vi) Date of birth(பிறந்த தேதி -வயதில் மூத்தவர்)
(vii) விண்ணப்பத்தின் தேதி மற்றும் நேரம் (விண்ணப்பதாரர் முந்தைய தேதி மற்றும் நேரத்தில் விண்ணப்பத்தை சமர்ப்பித்தால் அவருக்கு பின்னர் விண்ணப்பத்தை சமர்ப்பித்த GDS விண்ணப்பதாரரை விட முன்னுரிமை அளிக்கப்படும்)
குறிப்பு:-
GDS ஊழியர்-ன் மனைவி/கணவர் Central/State Government or their undertaking/PSU/Subordinate organizations etc போன்றவற்றில் பணிபுரிந்தால் மட்டுமே Spouse Ground அடிப்படையில் Transfer ல் முன்னுரிமை கிடைக்கும். spouse Ground அடிப்படையில் Transfer கோரும் GDS ஊழியர் விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கும் போது, Employer வழங்கிய சான்றிதழை Annexure - I அல்லது Annexure -ll என இணைக்கப்பட்ட வடிவத்தில் பதிவேற்ற வேண்டும்.
3. இடமாற்றம் செய்யும் முறை:
(i) GDS Online Transfer அட்டவணை அவ்வப்போது வெளியிடப்படும் போது, online முறையில் மட்டுமே Transfer Application ஐ சமர்ப்பிக்க வேண்டும்.
(ii) முடிந்தவரை, Online GDS Engagement Cycle தொடங்கும் முன் GDS Limited Transfer Cycle தொடங்கப்படும். ஒரு அட்டவணையை வெளியிடும்
Transfer Cycle அட்டவணை வெளியிடுவதற்கு முன்பு அவ்வப்போது மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள். விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை எந்த நேரத்திலும் எந்த காரணத்தையும் குறிப்பிடாமல் மாற்றுவதற்கு இலாகாவிற்கு முழு அதிகாரம் உண்டு.
(iii) விண்ணப்பதாரர்களுக்கான Online Transfer விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான விரிவான வழிமுறைகள்/செயல்முறை மற்றும் Division/ Unit Headகளால் செய்யப்படும் நடவடிக்கைகளும் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆன்லைன் போர்ட்டலில் GDS ஊழியர்கள் Limited Transfer Facility ன் கீழ் Application சமர்ப்பிப்பதற்கான நடைமுறைகள்.
பணியிடமாற்றம் கோரும் எந்தவொரு GDS ஊழியரும் தனது User Credential ஐ உருவாக்க விதி 3 இடமாற்ற போர்ட்டலில் சம்பந்தப்பட்ட கோட்ட தலைவர் மூலம் தனது மொபைல் எண்ணை புதுப்பிக்க /பதிவு செய்ய வேண்டும். மொபைல் எண்ணைப் புதுப்பிக்காமல் GDS ஊழியர்கள் பணியிடமாறுதலுக்கு விண்ணப்பிக்க முடியாது.
GDS ஊழியர்கள் மொபைல் எண்ணை பதிவு செய்தவுடன் அவர்கள் மொபைல் எண்ணைப் பயன்படுத்தி Online Portal ல் Login செய்ய முடியும். Login ID ஆக Employee ID இருக்கும். Login செய்வதற்கான கடவுச்சொல்(Pass word) அவர்கள் பதிவு செய்துள்ள மொபைல் எண்ணிற்கு அனுப்பப்படும்.
ஒன்று அல்லது இரண்டு வருட (As per Order) Continuous Engagement முடித்த GDS ஊழியர்கள் அவர்கள் டிரான்ஸ்பர் பெற விரும்பும் காலியிடங்களுக்கு(Clear Vacancies only) விண்ணப்பிக்கலாம்.
GDS ஊழியர்கள் தங்கள் பணியிடமாறுதல் கோரிக்கைகளை ஆன்லைனில் சமர்ப்பித்து முடித்தவுடன் விண்ணப்பத்தை சமர்ப்பித்ததற்கான குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் ஊழியர்கள் பதிவு செய்துள்ள மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்.
ஆன்லைன் விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி வரை GDS தனது விவரங்களை/விருப்பத்தை மாற்ற அல்லது தனது Request ஐ திரும்பப் பெறலாம். இது தவிர, விண்ணப்பதாரர்கள் ஏற்கனவே சமர்ப்பித்த பதவிகளின் விருப்பத்தேர்வுகளில் ஒரு முறை மாற்றத்திற்கான Short window வழங்கப்படும்.
.
பணியிட மாறுதலுக்கு விண்ணப்பித்த GDS ஊழியர்கள் தனது விவரங்கள்/விருப்பங்களை மாற்றுதல் அல்லது திரும்ப பெறுதல் ஆகிய நடைமுறைகளை விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி வரையில் செய்து கொள்ளலாம்.
விண்ணப்பித்த GDS ஊழியர்களின் பணியிட மாறுதல்கள் பரிசீலிக்கப்பட்டு பணி மாறுதல் உத்தரவு பட்டியல் வெளியிடப்படும். அதே நாளில் விண்ணப்பித்த GDS ஊழியர்களுக்கும் அவர்கள் அளித்த மின்னஞ்சலுக்கு பணி மாறுதல் உத்தரவு அனுப்பி வைக்கப்படும். பணியிட மாறுதல்களின் ஒருங்கிணைந்த பட்டியல் அஞ்சல் துறை இணையதளத்திலும், ஆன்லைன் பணியிட மாற்ற போர்ட்டலிலும் வெளியிடப்படும். மேலும் கோட்டத் தலைவர்களும் Login செய்வகன் மூலம் GDS ஊழியர்கள் பணிபுரிந்த இடம், தற்பொழுது பணியிட மாற்றம் செய்யப்பட்ட இடம் உள்ளிட்ட விவரங்களை காணலாம்.
பணியிட மாறுதலுக்கு விண்ணப்பித்து பணியிட மாறுதல் உத்தரவு கிடைக்கப் பெற்ற பின்பு பணியிட மாறுதலை ஏற்க மறுப்பது அந்த GDS ஊழியருக்கு கொடுக்கப்பட்ட பணியிடம் மாறுதல்களில் ஒரு வாய்ப்பாக எடுத்துக் கொள்ளப்படும்.
பணியிட மாறுதல் கோரிய காலியிடங்களுக்கு பணியிட மாறுதல் கிடைக்கப்படவில்லை என்றால் அடுத்த பணியிட மாறுதல் சுழற்சியின் போது மீண்டும் விண்ணப்பிக்கலாம்.
Rule 3 Transfer Portalல் பணியிட மாறுதலுக்கு விண்ணப்பிப்பதற்கு தங்கள் மொபைல் எண்ணை பதிவு செய்ய வேண்டும் என்ற தகவலை கோட்டங்கள் தங்கள் கோட்டத்தில் உள்ள GDS ஊழியர்களுக்கு தெரிவிக்க வேண்டும். GDS ஊழியர்கள் மொபைல் எண்ணை பதிவு செய்துவிட்டால் தங்கள் User ID மற்றும் மொபைல் எண் மூலம் Login செய்யலாம். கடவுச்சொல்(Pass word) GDS ஊழியர்களின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு அனுப்பி வைக்கப்படும்.
தவறாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், வரையறுக்கப்பட்ட ஓராண்டு காலத்தை நிறைவு செய்யாமல் விண்ணப்பித்த GDS ஊழியர்களின் விண்ணப்பங்கள், Put off Dutyல் உள்ள ஊழியர்களின் விண்ணப்பங்கள், துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கைகள் நிலுவையில் உள்ள GDS ஊழியர்களின் விண்ணப்பங்கள், பணியிட மாறுதலுக்கு தங்களுக்கு வழங்கப்பட்ட வாய்ப்புகளை ஏற்கனவே பயன்படுத்தி பிறகு மீண்டும் விண்ணப்பிக்கும் ஊழியர்களின் விண்ணப்பங்கள், Spouse Ground அடிப்படையில் Transfer க்கு விண்ணப்பிக்கும் ஊழியர் அதற்கென கொடுக்கப்பட்ட வரையறுக்கப்பட்டு படிவம் தவறாக இருத்தல் , விண்ணப்பித்த ஊழியரின் ஜாதி, கல்வி, Police Verification அறிக்கை போன்றவற்றில் ஏதேனும் நிலுவையில் இருத்தல் , Cooling off Period ஐ நிறைவு செய்யாமை ஆகிய நிராகரிக்கப்பட்டதற்கான காரணங்கள் அந்த ஊழியருக்கு அவர்கள் பதிவு செய்துள்ள மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.
Source :https://utilities.cept.gov.in/dop/pdfbind.ashx?id=11162
0 Comments